
posted 29th October 2022
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் ஒரு வருட ஞாபகார்த்த நினைவேந்தல் இன்றைய யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இதன்போது கௌரி சங்கரி தவராசாவின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா எழுதிய “கௌரி நீதியின் குரல்” புத்தகமும் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.சி சிறிதரன், செ. கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.கே. சிவாஜிலிங்கம், பா. அரியநேத்திரன், சீ. யோகேஸ்வரன், ஞா. சிறிநேசன், முன்னாள் மாகாணசபை முன்னாள் உறுப்பினர்பா. கஜதீபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ். தவராசாவின் பாரியாராவார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான பலருக்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY