
posted 1st November 2022
2022ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற ஏறாவூர் பிரதேசப் பாடசாலை வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு, மீராக்கேணி மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மீராகேணி கிராம அபிவிருத்தி சங்கத்தினால் (RDS) ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், மீராகேணி மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை, ஏறாவூர் அலிகார் தேசியப் பாடசாலை, மிச்நகர் இல்மா வித்தியாலயம் ஆகியவற்றின் வெற்றிபெற்ற மாணவர்கள் வரவேற்பளிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)