
posted 21st October 2022
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவும், நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியினர் நேற்று (20) வவுனியாவில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக, ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன்போது,
- “அரசே மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை முழுமைப்படுத்து”
- “மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்து”
- “தோட்ட தொழிலாளர்களின் சம்பளம், நிலம் மற்றும் வீட்டு உரிமையை உறுதி செய்”
- “வானத்தில் வட்டமிடும் விலைவாசியை, மக்களுக்கு கிட்டவாக கொண்டு வா”
- “வடக்கு - கிழக்கில் மத இனவாத நோக்கிலான தொல்பொருள் தேடுதல்களை உடனடியாக நிறுத்து”
போன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)