
posted 24th October 2022
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 60 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய 23 அதிகாலை 2 மணியளவில் மாதகல் கடற்கரையோரமாக குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கேரள கஞ்சாவை கடத்த பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் படகொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் படகு என்பன இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரும் இராணுவ புலனாய்வுப்பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)