காந்தி ஜெயந்தி தினம்

காந்தி ஜெயந்தி தினம் இன்று ஞாயிறு (02) யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், பாராமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் க. மகேசன், யாழ் மாநகர பிரதி முதல்வர், மாநகர ஆணையாளர், அரசியல் சமூக பிரதிநிதிகள், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் மற்றும் அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது காந்தீயம் ஏடு யாழ்ப்பாண மாவட்ட செயலர் க. மகேசனால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

மேலும், மகாத்மா கந்திக்கு மிகவும் பிடித்தமான “ரகுபதி ராகவ ராஜாராம்” பாடலும் மாணவர்களால் இசைக்கப்பட்டது.

காந்தி ஜெயந்தி தினம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY