கரபந்தாட்ட வீரர்கள் (மன்னார் மாவட்டம்) தேசிய, சர்வதேச இணைக்க முயற்சி

மன்னார் மாவட்டத்திலிருந்து ஓரிரு வருடங்களுக்குள் தேசிய மற்றும் சர்வதேச கரபந்தாட்ட விளையாட்டு கழகங்களுடன் ஒரிருவராவது இணைந்து கொள்வதற்கான ஏற்பாடாக மன்னாரில் கரபந்தாட்ட விளையாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதையிட்டு மன்னார் மாவட்ட கரபந்தாட்ட சம்மேளனத்தினால் இடம்பெற இருக்கின்ற மாவட்ட கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை முன்னிட்டு அதற்கான ஆரம்ப அறிமுக நிகழ்வொன்று சனிக்கிழமை (01.10.2022) மன்னார் உப்புக்குளத்திலுள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட கரபந்தாட்ட லீக் பணிப்பாளரும் மாவட்ட விளையாட்டு அதிகாரியும் தேசிய உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளருமான எம்.ஆர்.எம். யஸ்மின் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் விநோத் நாகரதலிங்கம் மன்னார் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி தேசிய கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்கள் தேசிய நடுவர்கள் உள்ளிட்ட பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந;திருந்தனர்.

மன்னார் மாவட்டத்தில் கரப்பந்தாட்ட விளையாட்டை வளர்த்து எடுக்கும் நோக்குடன் மன்னார் கரபந்தாட்ட பிரிமியர் லீக் ஒன்றை உருவாக்கி மன்னார் மாவட்டத்தில் எட்டு அணிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் தேசிய பயிற்றுவிப்பாளர்களால் வழங்கப்பட்டு இவர்களுக்கிடையே லீக் முறையில் போட்டிகள் இடம்பெற இருக்கின்றன.

இந்த எட்டு கழகங்களிலும் வெளி மாவட்டங்களிலிருந்து தலா இரு விளையாட்டு வீரர்களை தங்களுடன் இணைத்துக் கொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு கழகங்களிலும் இவர்களில் தலா ஒரு வீரர் மட்டுமே விளையாட்டில் கலந்து கொள்ள முடியும் எனவும், வெற்றியீட்டும் கலகங்களுக்கு முதலாவது பரிசாக 2 இலட்சம் ரூபாவும் 2 வது பரிசாக 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் 3 வது பரிசாக 1 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட இருக்கின்றன.

இவ் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 8ந் திகதி (08.10.2022) ஆரம்பமாகி ஒரு வாரத்துக்குள் நிறைவு பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விளையாட்டுப் போட்டிகள் மன்னார் பொது விளையாட்டு மைதானத்திலும், தாராபுரம் விளையாட்டு மைதானத்திலும், துள்ளுக்குடியிருப்பு மைதானம் தாழ்வுபாடு ஆகிய இடங்களில் இப் போட்டிகள் இடம்பெறும் எனவும் தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் இவ் விளையாட்டுப் போட்டிகளில் இணைந்துள்ள கழகங்களின் கிராமங்களில் மைதானம் விளையாடக்கூடியதாக காணப்பட்டால் அங்கும் இப் போட்டிகள் நடாத்துவதற்கு பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஓரிரு வருடங்களுக்குள் மன்னார் மாவட்டத்திலிருந்து ஒரிருவராவது தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் இணைத்துக் கொள்ளும் நோக்குடனே இதற்கான தூரநோக்கு சிந்தனையில் இதற்கான எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இப் போட்டியில் கலந்து கொள்ளும் எட்டு கழகங்களுக்கும் தேசிய மட்டத்திலான பயிற்றுவிப்பாளர்கள் தலா ஒருவர் வீதம் இந் நிகழ்வின்போது பொறுப்பேற்றுள்ளதுடன் ஒவ்வொரு கழங்களுக்கும் பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோருக்கும் அவர்களுக்கான 'ஜேசி' ஆகியனவும் வழங்கப்பட்டன.

கரபந்தாட்ட வீரர்கள் (மன்னார் மாவட்டம்) தேசிய, சர்வதேச இணைக்க முயற்சி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)