
posted 17th October 2022
நவீன அறிவியல் உலகின் சவால்களை வெற்றி கொண்டு, ஓளிமயமான எதிர்காலத்தை விரும்புபவர்கள் கணினி மற்றும் ஆங்கில அறிவை சிறுவயதிலயே ஐயம்திரிபுற கற்றுக் கொள்ள வேண்டும். கணினி மற்றும் ஆங்கிலக் கல்வி பெற்றுக் கொண்டவர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல தொழில்வாய்ப்பைப் பெற்றுள்ளமை கண்கூடு. சர்வதேச ரீதியில் அவர்களுக்கு கதவுகள் அகலத் திறந்துள்ளன என்று அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று தகவல், தொழில்;நுட்பம் மற்றும் தொலைக்கல்விக்கான மத்திய நிலையத்தில் கணினிக் கற்கையை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஹஸீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் மேலும் கூறுகையில்,
எங்களது எதிர்கால சுய இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரே ஆயுதம் கல்வி என்பதை யாரும் மறந்து தொழிற்படலாகாது. அரசியலோ, பொருளாதாரமோ, இதரm விடயங்களோ எங்களது எதிர்கால இருப்பை ஒருபோதும் தக்கவைத்துக் கொள்ளப் போவதில்லை என்பதை நாங்கள் தெளிவாக தெரிந்து கொண்டு, எதிர்காலப் பணிகளை சிறப்பாக முன்னெடுக்க வேண்டும்.
தகவல், தொழில்நுட்பத்துறை நொடிக்குநொடி வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றது. இன்றைய நவீன உலகின் சவால்களை நாங்கள் அறிவு ரீதியாக வெற்றி கொண்டு, எதிர்கால வாழ்வில் வெற்றியடைய வேண்டும். அதற்கான தயார்படுத்தல்களை முன்கூட்டியே திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
தற்காலத்தில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிகரித்த சம்பளம் பெறுபவர்கள் கணினி மற்றும் ஆங்கில அறிவை விருத்தி செய்து கொண்டவர்களாக உள்ளனர். தற்பொழுது எங்களுக்கு இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தவர்கள், இளைஞர், யுவதிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் கற்கைநெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இச்சந்தர்ப்பத்தை நாங்கள் நிறைவாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ஏ.ஜி.பஸ்மில், எம்.எம்.சித்தி பாத்திமா, கணக்காளர் கே.லிங்கேஸ்வரன், பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர் உள்ளிட்ட வளவாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். கற்றையை நிறைவு செய்து செய்தவர்களுக்கு, அதிதிகளினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY