
posted 4th October 2022
அம்பாறை மாவட்டத்தில் கடல் மீன்களின் விலைகள் தற்சமயம் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
குறிப்பாக இந்த மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்ளில் கரைவலை மீன்பிடி அமோகமாக இடம்பெற்றுவருவதால் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தற்சமயம் கரைவலைத் தோணிகள் மூலம் கடல் மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு நெத்தலி, கீரி, சூரை, பாரை போன்ற இனமீன்கள் கடந்த சில வாரங்களாகப் பிடிபட்டுவருகின்றன.
இதனால் ஒரு கிலோ 1500 ரூபா வரைவிற்பனையான நெத்தலி, கீரி போன்ற இன மீன்கள் ஒரு கிலோ 500 ரூபா வரை விலை வீழ்ச்சிகண்டுள்ளது.
இந்த இன மீன்கள் கூடுதலாகப் பிடிபடும் சமயங்களில் பிரதேசங்கள் தோறும் வீதி, வீதியாக வாகனங்களில் விற்பனை செய்வதிலும் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்றாட வாழ்க்கைச் செலவுககள் உச்சம் தொட்டுள்ள நிலையில் மீன்களின் விலைகள் வீழ்ச்சிகண்டுள்ளமை மக்களுக்கு சற்று ஆறுதலளிப்பதாகவே அமைந்துள்ளது.
இருப்பினும் ஆழ்கடல்களில் இயந்திரப் படகுகள் மூலம் பிடிக்கப்படும், கிளவள்ளு, அறுக்குழா, சுறா போன்ற பெரிய இன மீன்களின் விலைகள் உயர்வடைந்த நிலையிலேயே உள்ளன. அன்றாட உழைப்பை நம்பி வாழும் குறிப்பாக பாமர மக்கள் இத்தகைய பெரிய மீன்களை வாங்கி உண்ணும் நிலையில் இல்லை.
இந்த பெரிய இன மீன்கள் ஒரு கிலோ 2000 ரூபாவும், அதற்கு மேலும் விற்பனையாவதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கரைவலை மீன்பிடி இடம்பெறுவதால் அன்றாட தொழிலாளர்கள் கரைவலை மீன்பிடித்தொழிலை நாடிய வண்ணமுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY