கடலட்டை பிடித்த ஏழு பேர் மேலும் நடவடிக்கை

மண்டைதீவு கடற்பரப்பில் கடலட்டை பிடித்த ஏழு பேரும் தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவரையும் நீதிமன்றில் முற்படுத்த கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடற்படையினர் மற்றும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் கடலட்டை பிடித்து வந்த ஏழு பேர் கடலட்டையுடன் இனங்காணப்பட்டனர்.

தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவர் இனங்காணப்பட்டு அவரது படகும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடற்கரையோரமாக இருந்த தங்கூசி வலையும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டது.

குறித்த எட்டுப் பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடலட்டை பிடித்த ஏழு பேர் மேலும் நடவடிக்கை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY