
posted 27th October 2022
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன், ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பதவி தொடர்பிலான உத்தியோக பூர்வ கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலுள்ள இதற்கான உத்தியோக பூர்வ அலுவலகத்தில் (பணிமனையில்) வைத்து அவர் இந்த கடமைப்பொறுப்பை உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
இக்கடமைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் கலந்து கொண்டதுடன், கைலாகு கொடுத்து வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)