உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்த மீனவர்கள்

பாரம்பரிய சிறகுவலை தொழில் இடத்தில் கடலட்டை பண்ணை, மக்கள் எதிர்ப்பு,உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதிப்பு.பூநகரியில் சம்பவம்...!

பூநகரி - கிராஞ்சி இலவன்குடா கடற்பகுதியில் பாரம்பரியமாக சிறகுவலை தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் அப்பகுதியில் கடலட்டை பண்ணை அமைக்கப்படுவதற்க்க்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றுக் காலை முதல் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

குறித்த இலவன்குடா கடற்பரப்பில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உட்பட மீனவர்கள் சிறகுவலை தொழிலின் ஊடாக இறால், நண்டு, மீன் போன்றவற்றை பிடிப்பது அன்றாடா வாழ்வாதார தொழிலாக பல ஆண்டுகளாக இருந்துவருகின்றது.

இந் நிலையில் அவர்களது வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் தற்போது கடலட்டை பண்ணைகள் அமைக்கும் முயற்சிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையிலேயே குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் நேற்று (30) காலையிலிருந்து இரவிரவாக ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் தங்களிற்க்கு சாதகமான முடிவை சம்மந்தப்பட்டவர்கள் வழங்கும் வரை தாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்த மீனவர்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY