
posted 2nd October 2022
இன்று போதை வஸ்து வியாபாரமும் இதற்கு அடிமையாகிச் செல்வோரின் தொகை அதிகரித்து வருகின்றது. ஆகவே இளைஞர்கள் விளையாட்டில் அக்கறை காட்டுவதுபோல் போதை வஸ்துக்களை கட்டுப்படுத்த இளைஞர்கள் முன் வந்தால் இவற்றை கட்டுப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட கரபந்தாட்ட சம்மேளனத்தினால் இடம்பெற இருக்கின்ற மாவட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியை முன்னிட்டு அதற்கான ஆரம்ப அறிமுக நிகழ்வொன்று சனிக்கிழமை (01.10.2022) மன்னார் உப்புக்குளத்திலுள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
மன்னாரில் கரபந்தாட்ட விளையாட்டை வளர்த்து எடுப்பதற்கான முயற்சியாக இன்று பரந்தளவான ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கும் மன்னார் கரபந்தாட்ட பிரிமியர் லீக்குக்கு முதற்கண் வாழத்துக்களை தெரிவித்து நிற்கின்றேன்.
ஒரு கிராமத்தில் விளையாட்டுக்கள் மட்டுமல்ல சகல விடயங்களிலும் இளைஞர்கள் முன்னேற்றம் காண்பதற்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.
நாம் வவுனியாவுக்கு போனால் என்ன மன்னாருக்கு வந்தால் என்ன அங்குள்ள பெற்றோர், பெரியோர் எங்களிடம் கேட்பது தங்கள் பகுதிகளில் போதை வஸ்துக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கையை எடுங்கள் என்றுதான் கேட்கின்றார்கள்.
இந்த வேண்டுகோளுக்கான பொறுப்பை இளைஞர்களான நீங்கள்தான் ஏற்று அவற்றை செயல்படுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் இந்த போதை வஸ்து வியாபாரத்தில் ஈடுபடுபவர்களையும் இதற்கு அடிமைகளாக உள்ளவர்களையும் இனம் காண்பது அப்பகுதி இளைஞர்களால்தான் முடியும்.
இதற்காக அவர்களை தண்டிப்பதைவிட அவர்களை மிகவும் பண்பாட்டுடன் அணுகி இவற்றை தடை செய்ய இளைஞர்களால் முடியும் என நான் நம்புகின்றேன்.
அரசோ அல்லது பொலிஸாரோ இவற்றை கட்டுப்படுத்துவார்கள் என நம்பி இருப்தைவிடுத்து இளைஞர்களாகிய உங்களால்தான் அவற்றை தடுத்து நிறுத்த முடியும் என்ற நம்பிக்கை உண்டு.
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்துக்கு இளம் வீரர்களை கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை இவ்வாறு நிகழ்வுகளை நடாத்துகின்றபோது இவ்வாறு கிராமங்களிலுள்ள தீய செயல்களையும் இளைஞர்களால் முடியும் என்ற நம்பிக்கை யாவரிடமும் இருக்க வேண்டும்.
யுத்தம் முடிந்து பல வருடங்கள் கடந்து விட்டது. எமது மக்கள் இன்னும் அரசிடம் வாழ்வாதாரத்தை நோக்கியே இருந்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் மீள்குடியேற்றம் சரியான முறையில் வகுக்கப்படாததினால்தான் மக்கள் இன்னும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
இங்கு வழங்கப்பட்டிருக்கும் வாழ்வாதாரத்துக்கான நிதி பல கோடி ரூபாவாக காணப்படுகின்றது. ஆனால், இன்னும் எம் மக்கள் வறுமை கோட்டுக்குள்ளேயே வாழ்கின்றனர்.
இதற்கு அரச அதிகாரிகளின் சரியான செயல் திட்டங்கள் இன்மையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது.
ஆகவே நாம் எதிர்காலத்தில் விளையாட்டாக இருக்கலாம் அல்லது கல்வி மற்றும் வேறு திட்டங்களாக இருக்கலாம் நாம் யாவரும் ஒன்றிணைந்து சரியான திட்டங்களை வகுத்து அபிவிருத்தி காண முனைவோம் என தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY