
posted 13th October 2022
மிகவும் அவமானத்திற்குரிய ஒரு தோல்வி இலங்கைக்குக் கிடைத்திருக்கின்றது. நாட்டிற்கு எதிராக ஜெனீவா, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் எங்கள் நாடு தோல்வியடைந்து விட்டது. எமக்கு ஆதரவாக இருந்த பதினொரு வாக்குகள் இப்பொழுது ஏழாகச் சரிந்திருக்கின்றன. அதேபோல் நடுநிலையாக இருந்தவர்கள் 24 ல் இருந்து 20 ஆக குறைவடைந்திருக்கின்றார்கள். இது மிகவுமே அவமானத்திற்குரிய தோல்வி என்றுதான் குறிப்பிட்டாக வேண்டும்.
அண்மையில், ஜனாதிபதியின் விசேட உரை தொடர்பிலான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும்தெரிவித்ததாவது;
எமது வெளிநாட்டு அமைச்சர் சில இஸ்லாமிய நாடுகளின் ஒன்றிய நாடுகள் (OIC) இலங்கைக்கு ஆதரவாக இருக்கின்றார்கள் என்று எண்ணியிருந்தார். ஆனால், எந்தவிதமான சாதகமான பதில்களும் அந்த இஸ்லாமிய நாடுகளின் ஒன்றிய நாடுகளிடமிருந்து (OlC) எங்களுக்கு பெறப்பட்டதாகவில்லை. எங்களுக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு சீனா முயற்சித்திருக்கின்ற விடயம் எங்களுக்கு தெரிந்த விடயம். ஆனால், இவ்வாறான விடயங்கள் காரணமாக எங்களுக்கு எவ்விதமான நன்மையும் வரப்போவதில்லை.
நாங்கள் ஒரு விடயத்தை தெரிந்துகொள்ள வேண்டும். பொருளாதார குற்றவியல் தொடர்பான பிரச்சினை காணப்படுகின்றது. இது இந்த தீர்மானத்தின் ஒரு பகுதி அல்ல. இருந்தும், எமது நாட்டில் இருக்கின்ற அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்ற ஒரு விடயமாகத்தான் இது காணப்படுகின்றது. ஆகவேதான், அந்த விடயம் சில பேச்சுவார்த்தை மூலம் ஒரு கட்டத்திற்கு அந்த பிரச்சனையினை நாங்கள் தவிர்த்திருக்க முடியும், ஆனால் இரண்டாவது தடவையாக வெளிநாட்டு அமைச்சர் அங்கு சென்றிருந்தார். இது முன்னர் ஒரு காலமும் இடம்பெறாத விடயமாகத்தான் காணப்படுகின்றது. இருந்தும் இலங்கைகக்கு ஏற்பட்டது மிகவும் கவலைக்குரிய ஒரு தோல்வி என்றுதான் குறிப்பிடவேண்டும்.
இது எமது நடவடிக்கைகள் காரணமாகத்தான் நாங்கள் இப்போது தேவையில்லாத பிரச்சினைக்குள் நாங்கள் இப்போது சிக்கியிருக்கின்றோம்.
புது ஒரு சட்டமூலம் கொண்டுவரப்படவிருக்கின்றது. அதாவது, ஆட்களை புனர்வாழ்வு அளிப்பது தொடர்பாக கொண்டுவரப்படவிருக்கின்றது. அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டம் (PTA), இனவாத செயற்பாடுகள் ஆகியவற்றை ஊக்குவிக்கின்ற செயற்பாடுகள் ஆகிய அனைத்தும் இப்போது உயர் நீதி மன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. அதன் காரணமாக இறுதியான தீர்ப்பு வரும்வரை இப்போது அவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த புதிய சட்டமூலமானது அவர்கள் என்ன செய்ய விரும்புகின்றார்களோ அதனை நடைமுறைப்படுத்துகின்ற ஒரு விடயமாகத்தான் காணப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டு, ஈற்றில் அவர்கள் அதனுடைய பாரதூர தன்மை அறிந்து சில அதிகாரிகள் மேற்கொண்ட பிழை காரணத்தினால்தான் இது இடம்பெற்றதாக குறிப்பிட்டு அதனை நீக்கியிருக்கின்றார்கள். சட்டமா அதிபரினுடைய கருத்து இது தொடர்பாக பெறப்படவில்லை என்கின்ற அடிப்படையிலேதான் அப்போது நீக்கப்பட்டிருக்கின்றது. இது மிக மோசமான விடயம் .
ஒரு விடயத்தை நாங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக இந்த சட்டமூலம் முன்னாள் போராளிகள், அதேபோன்று போதைப்பொருள் பாவனையில் உள்ளவர்கள் அதேபோன்று அனைவரும் இந்த புனர்வாழ்வு அளிப்பு சட்டத்தின் முன் கொண்டுவரப்படவிருக்கின்றார்கள். இதன் காரணமாக சாதாரணமான மக்கள் கூட நீண்டகாலமாக எவ்விதமான சட்டநடவடிக்கைகளுமின்றி அவர்கள் தடுத்துவைக்கப்படக்கூடிய நிலைமை ஏற்படக்கூடியதாகவிருக்கும். இதன் காரணமாக அடிப்படை உரிமை மீறக்கூடிய சந்தர்ப்பங்கள் கூட எழலாம். அதுமட்டுமல்லாது அரசாங்கத்திற்கு எதிராக போராடுகின்ற மக்களை முடக்குகின்ற ஒரு நோக்கத்ததைக் கொண்டதாகத்தான் இது காணப்படுகின்றது. இந்த சட்டமூலத்தை நாங்கள் பார்க்கின்றபோது இராணுவத்தினரை ஜனாதிபதி வரவழைக்கின்ற சில அதிகாரங்கள் கூட இந்த சட்டத்தில் காணப்படுகின்றன. உறுப்புரை பிரிவு 22 குறிப்பிடுவதன்படி, எதாவது தடை கொண்டுவரப்படுமாக இருந்தால் அது கூட தண்டனைக்குரிய குற்றமாக்கப்படுகின்றது.
முன்னாள் போராளிகள் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் என்ன நடந்தது என்று சொன்னால், தானாக அரச பகுதிக்குள் வந்தவர்கள், சிறு போராளிகள், சாதாரணமான மக்கள், அவர்கள் உண்மையிலேயே போராளிகள் அல்ல. அவர்கள் ஏறத்தாழ 12,000 பேர் புனர்வாழ்வு அளிப்பதற்காக கருதப்பட்டார்கள். எமது நாட்டில் காணப்பட்ட அந்த வெற்றி சந்தோஷத்தில் யாருமே அதனை சவாலுக்கு உட்படுத்தப்படாத நிலை காணப்பட்டது. மக்கள் அவர்களுடைய உற்ரார், உறவினருடன் எந்தவிதமான தொடர்பினை இல்லாத நிலை காணப்படுகின்றது. அந்த நேரத்திலே செயலாளராக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி அவர்கள் சில தீர்மானத்தினை மேற்கொண்டிருந்தார். இதன் மூலம் அந்த மக்களை அவர் மிகவும் மோசமான முறையில் நடத்தியிருந்தார். ஆகவேதான், இந்த சட்டமூலமானது மிகவும் மோசமான புனர்வாழ்வு அளிப்பு முறையினை கொண்டுவரக்கூடியதாகவிருக்கும். ஆகவேதான் இந்த சட்டமூலம் இப்போது உயர் நீதி மன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த சட்டமூலம் காரணமாக நீங்கள் சொல்லக்கூடாது. உங்களுக்கு எதிராக போராடுகின்ற அனைவரும் பிழையான முறையிலே தண்டிக்கப்படவேண்டும் என்று நீங்கள் அரசாங்கம் என்ற ரீதியில் நினைக்கக்கூடாது. யாராவது உங்களுக்கு எதிராக போராடுகின்ற போது அவர்களை பயங்கரவாதிகளாக நீங்கள் காட்ட முற்படுகின்றீர்கள். இது மோசமான விடயம். ஆகவேதான், மக்கள் போராடுவதிலிருந்து அவர்களை தவிர்ப்பதற்காக நீங்கள் எடுக்கின்ற முயற்சியாகத்தான் நாங்கள் இதனை பார்க்கின்றோம். இந்த சட்டமூலம் சாதாரணமான முறையிலே அவர்கள் நீதி மன்றத்திற்கு செல்லுகின்ற அவர்களுடைய உரிமை மீறப்படுகின்றமை. ஏனென்றால் 2 வருடங்கள் அவர்கள் இந்த நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றார்கள். எந்தவிதமான நீதி கோருவதற்கான சந்தர்ப்பங்களும் வழங்கப்படாமல் அவ்வாறு நடக்கின்றது. ஆகவேதான் இது இறுதியில் எமது சமூகத்தில் பிளவுகளை உருவாக்குவதற்கு இது ஒரு காரணமாகக் கூட அமையலாம். ஆகவேதான் இந்த விடயம் மீண்டும் ஒரு முறை பரிசீலனைக்கு கொண்டுவரப்படவேண்டும் .

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY