
posted 24th October 2022
இறந்த காலம் என்பது பாலத்துக்கு அடியில் ஓடும் நீர் போன்றது. எதிர் காலம் என்பது தூரத்தில் உள்ள கானல் நீர் போன்றது. ஆகவே நாம் நிகழ் காலத்தில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என ஓய்வுநிலை பாடசாலை அதிபரும் டிலாசால் சபையைச் சார்ந்த அருட்சகோதரர் ஸ்ரணி இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் பேசாலை சென் பற்றிமா தேசிய கல்லூரியைச் சார்ந்த மாணவர்கள் மாகாண மட்டத்தில் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்ததை; முன்னிட்டு இவ் மாணவர்களின் கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்த கொண்ட ஓய்வுநிலை பாடசாலை அதிபரும் டிலாசால் சபையைச் சார்ந்த அருட்சகோதரர் ஸ்ரணி தொடர்ந்து உரையாற்றுகையில்
மாணவர்களாகிய உங்களுக்கு இறைவனால் தரப்பட்டுள்ள சக்தியை வெளியில் கொண்டு வருவதற்கு ஆசிரியர்கள் பெற்றோர்கள் உங்களுக்கு வழிகாட்டியுள்ளனர்.
அது மாத்திரமல்ல பழைய மாணவர்களாக இருக்கலாம் அல்லது பாடசாலை அபிவிருத்தி சபையாக இருக்கலாம் இவர்கள் யாவரும் ஒரு குழுவாக இயங்கி செயல்பட்டமையாலேயே இன்று நீங்கள் இந்த கௌரவிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை மாணவர்களாகிய நீங்கள் மறக்கக்கூடாது.
இந்த கல்லூhயிpல் யாவரும் ஒன்றினைந்து செயல்பட்டதின் காரணமாகவே மாணவர்களாகிய நீங்கள் இன்று பெரும் மதிப்புள்ளவர்களாக பரிணமித்து கௌரவிக்கப்படுவது மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி.
எதுவாக இருந்தாலும் வானத்த்pலிருந்து எமக்கு சும்மா கொட்டுவது கிடையாது. ஆனால் நாம் கடினமாக உழைக்க வேண்டும். நோக்கம் தவறாது குறிபார்த்து செல்ல வேண்டும்.
பிள்ளைகளே எமக்கு அடைய முடியாத இலக்கு என்பது இல்லை. ஆனால் நாங்கள் தன்னம்பிக்கையுடனும் விடா முயற்சியுடனும் பயணம் செய்ய வேண்டும்.
நாம் எல்லோரும் வெற்றி அடைய வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் கத்தோலிக்க பைபிலில் கூறப்படுகின்றது பரிசுத்த ஆவியின் கொடைகள் பல ஆனால் இவைகள் யாவும் ஒருவருக்கு கொடுக்கப்படுவதில்லை.
உங்களிடம் ஒரு கொடை உண்டு அதை நீங்களே கண்டு பிடிக்க வேண்டும். இதை கண்டுபிடிப்பதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களாகிய நாங்கள்தான் உங்களுக்கு வழிகாட்டப்படல் வேண்டும்.
விளையாட்டானது ஒருபோதும் படிப்பை கெடுப்பதில்லை. விளையாட்டும் அவசியம் படிப்பும் அவசியம்.
சில மாணவர்கள் பதினொரு வருடங்கள் ஒரு பாடசாலையில் இருந்திருப்பார் ஆனால் அவ் பாடசாலை அவருக்கு ஒரு நற்சான்று பத்திரம் வழங்க முனையும்போது அவ் மாணவன் அவ் பாடசாலையில் எந்தவொரு செயல்பாட்டிலும் பங்குபற்றாத ஒரு நபராகவே காணப்படுவார்.
ஒரு பாடசாலையில் 60 துணை பாடவிதானம் காணப்படுகின்றது இதில் ஒன்றையாவது மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிள்ளைகளே வெற்றிக் கொள்ளும்போது தலையை இழக்கக் கூடாது. தோல்வி வரும்போது மனதை இழக்கக் கூடாது.
மாணவர் பெற்றோர் ஆசிரியர்களுக்கு நான் இந்நேரம் தெரிவிப்பது இறந்த காலம் என்பது பாலத்துக்கு அடியில் ஓடும் நீர் போன்றது. எதிர் காலம் என்பது தூரத்தில் உள்ள கானல் நீர் போன்றது. ஆகவே நாம் நிகழ் காலத்தில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)