
posted 12th October 2022
மன்னாரில் இருந்து தப்பி இந்தியாவிற்குள் இரகசியமாக பிரவேசித்த இலங்கையர் ஒருவர் இன்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
24 வயதான குறித்த நபர் மன்னாரில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மன்னாரிலிருந்து படகொன்றில் 5 பேர் கொண்ட குடும்பத்துடன் இந்தியா புறப்பட்டதாகவும், இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தியபோது, கடலில் குதித்து 7 கடல் மைல் தூரம் நீந்தி இந்தியாவின் கடைசி கடல் முனையான தனுஷ்கோடியை அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கடற்படையினர் தடுத்து நிறுத்தியபோது, உயிருக்கு பயந்து கடலில் குதித்து தப்பிச் சென்றதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உள்ளூர் மீனவர்கள் அவர் கடலில் போராடுவதைக் கண்டு மரைன் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர், அவர்கள் அவரை அழைத்து வந்து மண்டபத்தில் விசாரணைக்காக தடுத்து வைத்தனர்” என்று ஒரு பொலிஸ் அதிகாரி கூறினார்.
அந்த நபர் குதித்த பிறகு படகு பயணத்தைத் தொடர்ந்த ஐந்து பேர் கொண்ட குடும்பம், கடந்த வெள்ளிக்கிழமையே கரையை அடைந்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY