
posted 17th October 2022
எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (16) காலை கைது செய்ததோடு, அவர்களின் மீன் பிடி படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர், அன்ரனி ஹேமா நிஷாந்தன் , இமானுவேல் நிக்சன், துருவந்தா ஸ்ரீலால், சுதீஷ் சியான் உள்ளிட்ட இலங்கை மீனவர்கள் ஐவரையே இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் நடுக்கடலில் இலங்கை கடல் எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த நிலையில் இந்திய கடற்படையிடம் சிக்கினர்.
இவர்கள் ஐவரும் விசாரணைக்காக தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டு கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)