
posted 21st October 2022
சம்மாந்துறை பிரதேச சபை தமது பிரதேச சபை பகுதிகளை பயனுள்ள மரநடுகை மூலம் அழகு படுத்தும் செயற்திட்டமொன்றை அமுல்நடத்தி வருகின்றது.
இதற்கமைய சம்மாந்துறை கைகாட்டி குளப் பிரதேசத்தை சிரமதானம், மரநடுகை மூலம் அலகுபடுத்தும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்படி, கைகாட்டிக் குளப் பிரதேசத்தினை அழகுபடுத்தும் நோக்கில் சம்மாந்துறை பிரதேச சபையும், இளைஞர் அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்த மரநடுகை நிகழ்வும் சிரமதானமும் இன்று வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். நளீம் (ஜனாப்) அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற வேலைத்திட்டம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ. எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சமூக இளைஞர் மேலான்மை அமைப்பு, அஸ்கறியன் நலன்புரி நண்பர்கள் அமைப்பு, நம்பிக்கை நண்பர்கள் ஒன்றியம், அஸ்கரியன் இளைஞர் நண்பர்கள் ஒன்றியம், பலாஹ் நண்பர்கள் ஒன்றியம், ஒற்றுமை நண்பர்கள் ஒன்றியம் ஆகிய அமைப்புகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம். முஸ்தபா, உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY