அப்துல் கலாமின் 91ஆவது பிறந்தநாள்

பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 91ஆவது பிறந்தநாள் சனிக்கிழமை (15) யாழ்.இந்திய துணைத் தூதரகத்தால் கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இந்தியா முற்றத்தில் உள்ள அவரது சிலைக்கு யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் மலர் மாலை அணிவித்து மற்றும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோன்று தலைமை நூலகர் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதையும் செலுத்தினார்.

டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் "மணல் சிற்பம்" யாழ்பாணம் காரைநகரிலுள்ள கசுவரினா கடற்கரையில் யாழ் வேலணையை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுப்பிரமணியம் சுகுமாரினால் உருவாக்கப்பட்டது. அதற்கு யாழ் இந்திய துணைத் தூதுவர், காரைநகர் பிரதேச சபை தவிச்சாளர் க. பாலச்சந்திரன் மற்றும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். மணல் சிற்ப கலைஞர் சுப்பிரமணியம் சுகுமாரை ஊக்குவிற்கும் பொருட்டு யாழ். இந்திய துணைத் தூதுவர் ரொக்கப் பரிசு வழங்கினார்.

அப்துல் கலாமின் 91ஆவது பிறந்தநாள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)