அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் அகல்வில் மூவர் கைது

அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் அகல்வில் ஈடுபட்ட முன்று சந்தேகநபர்களை இன்று தரிமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

புளியம் பொக்கணை மற்றும் தருமபுரம் பகுதியில் அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் அகல்வில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தருமபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தருமபுரம் பொலிஸார் விரைந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே வேளை மணல் அகல்வுக்கு பயன் படுத்திய 02 டிப்பர்களும், 01 உழவுயிந்திரம் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட ரிப்பரகள், உழவு இயந்திரம் என்பன நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் அகல்வில் மூவர் கைது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)