551 வது படைப்பிரிவால் யாழ் கற்கோவளம் பாடசாலைக்கு திறன் வகுப்பறையாக மாற்றம்.

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பாடசாலையில் ஏற்கனவே இருந்த வகுப்பறயை சிமாட் வகுப்பறையாக மாற்றி நேற்றைய தினம் சிறிலங்கா இராணுவத்தின் 551 வது படைப்பிரிவினரால் பாடசாலை சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த கற்கோவளம் பாடசாலை அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கிலேயே குறித்த வகுப்பறை சிமாட் வகுப்பறையாக மாற்றப்பட்டு படையினரால் கையளிக்கப்பட்டுள்ளது.

551 காலாட்படை பிரிகேட் துருப்புக்கள் ஸ்மார்ட் கிளாஸ் அறையை மாற்றியமைத்து வழங்குகின்றன.

சமஸ்த லங்கா சசனரக்ஷக பல மண்டலத்தின் பிரதம பதிவாளர், வென் முகுனவெல அனுருத்த தேரரின் நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்ட குறித்த சிமாட் வகுப்பறையை சிறிலங்கா இராணுவத்தின் 55வது காலால் படை தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த திறன் வகுப்பறையை பாடசாலை சமூகத்தினரிடம் கையளித்தனர்.

இதில் வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் எஸ். சத்தியபாலன், 551 காலாட்படை படைத் தளபதி, லிரிகேடியர் சிந்திக்க, உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

551 வது படைப்பிரிவால் யாழ் கற்கோவளம் பாடசாலைக்கு திறன் வகுப்பறையாக மாற்றம்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY