
posted 17th October 2022
யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபட்ட மூன்று சந்தேக நபர்களை யாழ் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஐஸ் போதைப்பொருள் வியாபாரி ஐஸ் போதை பொருள் வாங்க வருபவர்களிடம் பணம் இல்லாதவிடத்து அவர்களது கைத் தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை அடகாக வாங்கிக்கொண்டு ஐஸ் போதை பொருள் விற்பனை செய்து வந்துள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையில் பொலீஸ் உப பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிசாரே குறித்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபரிடமிடுந்து 07 கையடக்க தொலைபேசிகள் ஒரு FZ ரக மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 2கிராம் 270 மில்லிக்கிராம் ஐஸ் போதையும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் நாளை மன்றில் முற்படுத்தப்படவுள்ளதுடன் சான்றுப் பொருட்களும் ஒப்படைக்கப்படவுள்ளன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)