105 ஆவது ஆண்டு விழாவும் முதியோர் மற்றும் சிறுவர் கௌரவிப்பு  நிகழ்வு

அளவெட்டி சைவ வாலிபர் சங்கம் நடத்திய 105 ஆவது ஆண்டு விழாவும் முதியோர் மற்றும் சிறுவர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு சைவ வாலிபர் சங்கத் தலைவர் ஓய்வு நிலை மருந்தாளர் க நாகலிங்கம் தலைமையில் அளவெட்டி கும்பிழாவளைப் பிள்ளையார் ஆலய திருமண மண்டபத்தில் நடைபெற்றது

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் கலந்து கொண்டார்.

கும்பிளாவளைப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இராம. சூரியபிரபாகர குருக்கள் ஆசியுரை வழங்கினார்.

கும்பிளாவளை முன்பள்ளியின் சிறார்கள் பரிசுப் பொருள்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அளவெட்டி கிராமத்தின் முதுபெரும் ஓதுவாரூம் ஓய்வு பெற்ற மருத்துவ சேவையாளரும் ஆகிய நாகலிங்கம் சபாரத்தினம் மூத்த சமய பணியாளர் என்ற வகையில் கௌரவிக்கப்பட்டார். இவருக்கான கௌரவத்தை பிரதம விருந்தினர் வழங்கினார்.

நிகழ்வின் நிறைவில் அளவெட்டி சைவ வாலிபர் சங்கத்தின் 105 ஆம் ஆண்டு பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.

105 ஆவது ஆண்டு விழாவும் முதியோர் மற்றும் சிறுவர் கௌரவிப்பு  நிகழ்வு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY