
posted 24th October 2022
கோப்பாய் ஆனந்தபுர பகுதியில் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதைப் பொருள் பாவனையாளர்கள் அதிகரித்துள்ள நிலையில் கோப்பாய் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலின்படி கோப்பாய் பொலிசாரினால் 24 மணிநேர விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் கோப்பாய் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், நேற்று இரவு கோப்பாய் ஆனந்தபுர பகுதியில் கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் ஆனந்தபுரப் பகுதியில் 25 வயதுடைய இளைஞன் ஒருவன் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக இந்த போதைப் பொருளை பாவித்து வருவதாகவும் அதிலிருந்து விடுபட முடியாது உள்ளதாகவும் ஆனந்தபுரப் பகுதியிலேயே தான் போதைப் பொருளை காசு கொடுத்து பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிசார்நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)