ஹஸன் மௌலானாவுக்கு நினைவேந்தல்

இஸ்லாமிய தமிழ் இலக்கிய காவலர், தீன் தமிழ் கவிஞர், தாஜுல் அதீப், கலாபூஷணம் மர்ஹூம் அல்-ஹாஜ், எஸ்.ஏ.ஆர்.எம். செய்யிது ஹஸன் மௌலானா அவர்களுக்கு நிந்தவூரில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (02.10.2022) நடத்தப்பவிருக்கின்றது.

நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில், நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நிந்தவூரில் கலை, இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருவதுடன் உயிரோட்டமான செயற்பாடுகளையும் தொடர் தேர்ச்சியாக முன்னெடுத்துவரும் கலை, இலக்கியப் பேரவையின் தலைவரும், கவிஞருமான டாக்டர். ஏ.எம். ஜாபிர் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

நினைவேந்தல் நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத்தலைவரும் ஓய்வு பெற்ற அதிபருமான எஸ். அகமது, அகர ஆயுதம்தலைவர் கவிஞர் இலக்கியன் முர்ஷித், பேரவைச் செயலாளரும், கவிஞருமான தம்பிலெவ்வை இஸ்மாயில் (பொறியியலாளர்) ஆகியோரின் ஒருங்கிணைந்த சிறப்பு ஏற்பாட்டில் நிகழ்வுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செயய்ப்பட்டுள்ளன.

மேலும், நிகழ்வில் கவிஞர் காலபூணம் எஸ்.அமது, தமிழ் நாடு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தலைவர் பேராசிரியர் சே.மு. முஹம்மதலி, டாக்டர். எஸ்.ஏ.ஆர்.எம். அகமட் மௌலானா, இலக்கிய ஆர்வலர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா, பொறியியலாளர் ரீ. இஸ்மாயில் ஆகியோர் விசேட நினைவேந்தல் உரைகளை ஆற்றுவதுடன், கவிஞர் மருதமுனை ஹஸன், எஸ்.எச்.எம். அபுலஹ்லா மௌலானா, மூத்த கவிஞர் பாலமுனை பாறூக் ஆகியோர் கவி வாழ்த்தும் ஆற்றுவர்.

மேலும் எஸ்.எச்.எம். இர்பான் மௌலானாவின் கிரா அத்துடன் ஆரம்பமாகும் நிகழ்வில், நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவையின் தலைவர் கவிஞர் டாக்டர். ஏ.எம். ஜாபிர் தலை மை உரையும் ஆற்றுவார்.

உலகின் இஸ்லாமிய இலக்கிய வரலாறு எழுதப்படும்போது மர்ஹும். எஸ்.ஏ.ஆர்.எம். ஹஸன் மௌலானாவை மறந்து எழுதலாகாது எனவும் இஸ்லாமிய இலக்கியம் என்றாலே மர்ஹும் மௌலானா தான் என முக்கியத்துவம் பெறும் இவர் குறித்து, இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் தோற்றுவாய் பேராசிரியர் ம.மு. உவைஸ் என்றால், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளுக்கு தோற்றுவாய் மர்ஹும் செய்யித் ஹஸன் மௌலானா எனவும் போற்றப்படுகின்றது.

இதனை பேராசிரியர் ம.மு. உவைஸ்தான் 1990 களில் எழுதிய மருதை முதல் வகுதை வரை எனும் நூலிலும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டின் முன்னோடி ஹஸன் மௌலானா எனவும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த வகையில், இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் தொடக்கமான மருதமுனை மாநாட்டின் 50 வருட நிறைவினை 2016இல், இதன் பொன்விழா நிகழ்வாக முஸ்லிம் காங்கிரஸ் நிகழ்த்தி மறைந்து கிடந்த மாநாட்டின் மகத்துவத்தையும், அதன் உயிர்நாடி மர்ஹும் செய்யித் ஹஸன் மௌலானாவின் மாண்பையும் தூக்கி நிறுத்திய வரலாறும் இச்சந்தரப்பத்தில் நினைவு கூரத்தக்கது.

ஹஸன் மௌலானாவுக்கு நினைவேந்தல்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY