
posted 26th October 2022
தெல்லிப்பழையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (26) புதன்கிமை விழிப்புணர்வுப் பேரணியொன்று இடம்பெற்றது.
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வலிவடக்கு பிரதேச சபை தெல்லிப்பழை உப அலுவலகம் மற்றும் தெல்லிப்பழை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் காலை 9 மணியளவில் ஆரம்பித்த பேரணி தெல்லிப்பழைச் சந்தியில் நிறைவடைந்தது.
போதைப்பொருள் பாவனையை ஒழித்தல், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் பாவனையை குறைத்தல், பாலின சமத்துவத்தை பேணல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் இந்தப் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள்,சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் என பலரும் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)