
posted 7th October 2022
மன்னார் மாவட்டத்தில் மாணவர்கள் போதை வஸ்துக்களுக்கு உள்ளாகாத நிலைக்கு கொண்டு வரும் நோக்குடனும் ஏழை மாணவர்கள் மத்தியில் கலை கலாச்சாரத்தை கொண்டு வரும் நோக்கமாக மன்னாரில் கலை மன்றத்தை ஆரம்பிப்பதாக விஎம்சிரி கலை மன்றம் ஆரம்பிக்கப்படுவதாக இதன் இயக்குனரும் பொறியியலாருமான விமலேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
புதன்கிழமை (05.10.2022) மன்னாரில் விஎம்சிரி கலை மன்றக் கட்டிடத்தை முன்னாள் கணக்காய்வு அத்தியட்சகரும் தற்பொழுது அவுஸ்ரேலியாவில் வசிப்பவருமான ஏ. லோகநாதன் திறந்து வைத்தார்.
இதன்போதே இதன் இயக்குனரும் பொறியியலாருமான விமலேஸ்வரன் தெரிவிக்கையில்;
அதாவது இன்றைய உலக மயமாக்கல் சூழல் வாழ்க்கை முறைமையில் நாம் சிக்கி இருப்பதனால் இவற்றை பலர் உணராத தன்மையில் வாழந்து கொண்டிருப்பதால் எமது மாணவர்களை பேராபத்துக்களிலிருந்து இவர்களை மீட்டு எடுப்பதற்காகவும், தற்பொழுது மாணவர்கள் போதை வஸ்துகளுக்கு அடிமைகளாக மாறி வருவதால் இவற்றை தடுக்கும் ஒரு நோக்கமாகவும், வாழ்க்கை சுமை மன அழுத்தங்களிலிருந்து மாணவர்களை வெளியில் கொண்டு வரும் நோக்குடன் வாழ்க்கை முறையை ஏற்படுத்தவதற்காக ஆர்வம் ஆசை கொண்ட வசதிகள் அற்ற மாணவர்களுக்கு ஒரு ஆரம்ப களமாக இந்த விஎம்சிரி கலை மன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இம் மன்றத்தின் எதிர்கால செயல்பாடாக தற்பொழுது இசை, நடனம் தவிர்ந்த ஓவியம், இசை கருவிகளை பயிற்றுவித்தல், வறுமை கலைகளை கற்றுக் கொடுத்தல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
எதிர்காலத்தில் கலை மற்றும் இசை நிகழ்ச்சி நடாத்துவதும் மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்கு நிறுவனம் சார்பாக அனுசரனை மேற்கொள்வதும் திட்டங்கள் இருக்கின்றன.
எமது மாவட்டத்தின் கலை மற்றும் கலைஞர்கள் போன்றவற்றை முறையான ஆவணப்படுத்தல் போன்றவற்றையும் எதிர்காலத்தில் இக் கலா மன்றம் மேற்கொள்ள திட்டம் வகுத்துள்ளது.
அத்துடன் மாணவர்கள் எவரும் இங்கு வந்து கற்றுக் கொள்ள முடியும் எனவும், மாதம் இவர்களின் கட்டணம் நூறு ரூபாய் மாத்திரமே அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY