மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் தகைசார், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பத்மநாதன் எழுதிய திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் பற்றிய மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா இன்று புதன்கிழமை (19) முற்பகல் 9.30 மணியளவில் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இந்து நாகரிகத்துறை ஏற்பாட்டில் துணைவேந்தர் பேராசிரியர்
சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில், யாழ். பல்கலைக்கழகத் தமிழ்துறை முன்னாள் பேராசிரியர் சி. சிவலிங்கராஜா, வரலாற்றுத்துறை முன்னாள் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த. சத்தியமூர்த்தி ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

தொடர்ந்து நூலாசிரியர், சி.பத்மநாதன் இந்து கற்கைகள் பீடத்தினரால் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

நூலாசிரியரும் பேராசிரியருமான சி. பத்மநாதனால் மூன்று நூல்களும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் நூலின் பிரதிகளை யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, தமிழ்த்துறை முன்னாள் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா, வரலாற்றுத்துறை முன்னாள் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த. சத்தியமூர்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More