முல்லைத்தீவு மீனவர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம்

சோற்றிற்க்காக வீதியில் இறங்கிப் போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்கப்பட்டமைக்கு தமது எதிர்ப்புகளை தெரிவித்து கொள்வதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் காத்தலிங்கம் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அவர் தனது வடமராட்சியில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சோத்துக்கு வழி இல்லாத நிலையிலேயே மீனவர்கள் முல்லைத்தீவில் வீதியில் இறங்கிப் போராடிய தாகவும், அவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் நடாத்தியமைக்கு தாம் எதிர்ப்பதாகவும், எதிர்வரும் 9ஆம் திகதி இது தொடர்பில் நல்ல பதில் தருவதாக அதிகாரிகள், மற்றும் துறை சார்ந்தவர்கள் நேற்றைய தினம் (06) உறுதியளித்துள்ளதாகவும், அவ்வாறு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாதவிடத்து வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் மீனவர் போராட்டமும் நடத்தப்படவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பாக மண்ணெண்ணெய் பிரச்சனை மோசமாக இருப்பதாகவும் வாரத்திற்கு ஒரு தடவை மாத்திரம் 29 லிட்டர் வழங்கப்படுவதாகவும், அது ஒரு நாளுக்கு கூட போதாது என்றும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மீனவர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY