
posted 4th October 2022
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் முப்பெரும் வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கமைய மயிலாந்தனை கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள பொத்தானை கிராமம் தமிழ், முஸ்லீம், கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களை பின்பற்றும் மக்கள் வாழும் கிராமமாகும். இதனால் இங்கு மதங்களுக்கு இடையிலான இன முறுகல்கள் அடிக்கடி ஏற்பட்டு வந்தது. மதங்களுக்கு இடையிலும், இனங்களுக்கு இடையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு வீதி நாடகம் ஒழுங்கு செய்து விழிப்புணர்வு செய்யபட்டது.
"நான் ஒரு சுக தேகி மருத்துவ முகாம்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் மட்டக்களப்பு நகரில் இருந்து சுமார் 67 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள மருத்துவ வசதிகள் அற்ற கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாகனேரி, பெட்டை குளம், குளத்துமடு, முள்ளிவட்டவான் கிராமங்களை சேர்ந்த மக்கள் 7 மாத காலமாக எந்த ஒரு மருத்துவ வசதியும் இல்லாமல் காணப்பட்டனர்.
இங்கு வாழ்கின்ற 100 மக்களுக்கான தொற்றா நோய்களை கண்டறியும் வைத்திய மருத்துவ முகாம் நடைபெற்றததுடன், தொற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 50 பொதுமக்களுக்கான மருந்துகளும் வழங்கப்பட்டன. இவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டு காணப்பட்டார்கள். இம்மருத்துவ முகாமானது, மிகவும் பிரயோசனமாக காணப்பட்டது. இதில் சிறு குழந்தைகள் உட்பட வயது வந்தவர்கள் என சுமார் 150 கிராம மக்கள் பயன் பெற்றுள்ளார்கள்.
பெட்டைக்குளம் கிராமத்தில் சுமார் 30 குடும்பங்களை சேர்ந்த பெண்கள், பிள்ளைகள், முதியோர்கள் மிகவும் சுகாதார சீர்கேடு மற்றும் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டதுடன், இங்கு இளவயது திருமணம், சிறுவர்கள் போதை பொருள் பாவனை, பாடசாலை இடை விலகல், குடும்ப வன்முறை அதிகரித்து காணப்பட்டன. இவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அக்கிரம மக்கள் அனைவருக்கும் உணவு சமைத்து வழங்கியதுடன், நல்லிணக்கத்தையும் இவர்கள் மத்தியில் ஏற்படுத்தி, விழிப்புணர்வு வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டதுடன், சட்ட ஆலோசனைகளும் இதன்போது வழங்கப்பட்டன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY