மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெற்ற ரென்னிஸ் விளையாட்டு!

இலங்கை ரென்னிஸ் சம்மேளனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு டென்னிஸ் பயிற்சி மையத்தினால் முதன்முறையாக மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கடற்கரை டென்னிஸ் போட்டி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவரும், இலங்கை ரென்னிஸ் அக்கடமியின் உப தலைவருமான சுரேஸ் சுப்பிரமணியம் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிக்காந், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் றஜித சிறி டமின்ட, அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கங் டமயந்த விஜயசிறி, மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி எஸ். ஈஸ்வரன், இலங்கை ரென்னிஸ் அக்கடமியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாரதிராஜ்பிள்ளை, மட்டக்களப்பு ரென்னிஸ் சங்கத் தலைவர் ஜனன் மற்றும் செயலாளர் எஸ்.தர்சன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இக் கடற்கரை ரென்னிஸ் விளையாட்டைப் பார்வையிட சுமார் 400 க்கும் மேற்பட்ட விளையாட்டு ஆர்வலர்கள் வருகை தந்திருந்தனர்.

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெற்ற ரென்னிஸ் விளையாட்டு!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY