
posted 19th October 2022
“இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு அறவழியில் மக்கள் நீதி மையம் தொடர்ந்து குரல் கொடுக்கும்.” - இவ்வாறு மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் ஹாசனை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சி. சிறீதரன் எம். பியிடம் உறுதியளித்தார்.
தமிழகம் சென்றுள்ள சிறீதரன் எம். பி. மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் ஹாசனை ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சியின் மாநில தலைமையகத்தில் 16.10.2022 அன்று சந்தித்து உரையாடினார். இதன்போதே கமல் ஹாசன் மேற்கண்டவாறு உறுதியளிளத்தார்.
இந்த சந்திப்பின் போது, “போர், பொருளாதார நெருக்கடி, அரசியல் சூழல் காரணமாக இலங்கைவாழ் தமிழர்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி நிற்கின்றனர். மாகாணங்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் (தன்னாட்சி உரிமை) பெறுவதற்கும், தமிழர்களின் தனித்துவமான மொழி அடிப்படையில் தீர்வு அமைய வேண்டும் என்பதற்காகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து போராடி வருகின்றது. தமிழர்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது பற்றிக் கவலை தெரிவித்த அவர், மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் ஹாசன் இலங்கைக்கு வருகை தரவேண்டும் என்று அழைப்பும் விடுத்தார்.
“இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு அறவழியில் மக்கள் நீதி மையம் தொடர்ந்து குரல் கொடுக்கும்” என்று இதன்போது கமல் ஹாசன் உறுதியளித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)