போதை மருந்துகளுடன் இருவர் கைது

கோப்பாய் பகுதியில் போதை ஊசி மருந்துகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கோப்பாய் மற்றும் அரசடி பகுதியை சேர்ந்த 28 வயது நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உப பொலிஸ் பரிசோதகர் மேனனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சந்தேக நபர்கள் கோப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து 10 போதை ஊசிகள், இரண்டு கிராம் ஐஸ் போதைப் பொருள், ஒன்றரை கிராம் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதை மருந்துகளுடன் இருவர் கைது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)