
posted 12th October 2022
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அணுசரனையில் சொண்ட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப் பொருள் பாவனையும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும், போதைப் பொருள் பாவனையினை கட்டுப்படுத்துவதற்குரிய சட்டம் தொடர்பாகவும் செயலமர்வு இன்று புதன்கிழமை (12) சொண்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் ச. செந்துராஜாவின் நெறிப்படுத்தலில் யாழ் மாவட்ட சர்வமத செயற்குழுவின் இணைப்பாளர் திரு.க. கௌரிரூபன் தலைமையில் திருமறைக்கலாமன்ற கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது.
இச்செயலமர்வின் வளவாளர்களாக யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி கோசலை மதன் அவர்களும், போதைப்பொருள் தடுப்பு வளவாளர் திரு . பிறேமராஜ் அவர்களும் கலந்து கொண்டனர்.
இச் செயலமர்வில் சர்வமத தலைவர்கள், யாழ் மாவட்ட சர்வமத செயற்குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சொண்ட் நிறுவன உத்தியோகத்தர்களும் பங்குபற்றினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)