பேசாலை 100 வீட்டுத் திட்டத்தில் புனித செபமாலை அன்னையின் பெருவிழா

புனித செபமாலை மரியன்னையின் பெருவிழாவானது மன்னார் மறைமாவட்ட்தில் பேசாலை பங்கில் வெற்றி அன்னை நூறு வீட்டுத் திட்டத்தில் அன்னையின் சிற்றாலயத்தில் கடந்த இரு தினங்கள் நவநாளும் திவ்விய நற்கருணை ஆராதனையையும் இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (07) காலை பேசாலை பங்கு தந்தை அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளாரின் எற்பாட்டில் சிறுத்தோப்பு பங்கு தந்தை அருட்பணி சீமான் மரியதாசன் அடிகளாரின் தலைமையில் பேசாலை பங்கு தந்தை மற்றும் உதவி பங்குத் தந்தை டிசாந்தன் அடிகளாளர்கள் இணைந்து திருவிழா கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.

திருப்பலியைத் தொடர்ந்து இக் கிராமத்துக்குள் அன்னையின் திருச் சுரூபம் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு ஈற்றில் அருட்பணி சீமான் மரியதாசன் அடிகளாரால் பக்தர்களுக்கு திருச்சுரூப ஆசீரும் வழங்கப்பட்டது.

பேசாலை 100 வீட்டுத் திட்டத்தில் புனித செபமாலை அன்னையின் பெருவிழா

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY