பிரபல நடிகரான தர்சன் தர்மராஜ் தனது 41ஆவது வயதில்  இன்று காலை காலமானார்.
பிரபல நடிகரான தர்சன் தர்மராஜ் தனது 41ஆவது வயதில்  இன்று காலை காலமானார்.

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இறக்குவானையில் பிறந்த தர்சன் சிட்னி சந்திரசேகரின் இயக்கத்தில் உருவான ''A-9'' நாடகத்தினூடாக கலைத்துறைக்குள் பிரவேசித்தார். 2008ஆம் ஆண்டு வௌியான ''பிரபாகரன்'' எனும் திரைப்படம் ஊடாக அவர் திரைப்படத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

2013ஆம் ஆண்டு தர்சன் தர்மராஜுக்கு ''இனியவன்'' திரைப்படத்துக்காக 2 விருதுகள் கிடைத்திருந்தன. மாத்தா, சுனாமி, கோமாளி கிங்ஸ் உள்ளிட்ட பல தமிழ், சிங்கள மொழி திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார்.

யதார்த்தமான நடிப்புத் திறமைகள் நிறைந்த நடிகராக விமர்சகர்களால் தொடர்ந்து பாராட்டப்பட்ட அவர், அனைத்து தமிழ், சிங்கள ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான கலைஞராகவும் வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகரான தர்சன் தர்மராஜ் தனது 41ஆவது வயதில்  இன்று காலை காலமானார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY