
posted 26th October 2022
மன்.பேசாலை சென்.பற்றிமா தேசிய பாடசாலை விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் கண்டு வருவதில் ஒரு அங்கமாக இவ் வருடம் முதல் (2022) இவ் பாடசாலையில் 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான உதைபந்தாட்ட குழு முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் பேசாலை சென்.பற்றிமா தேசிய பாடசாலையானது கல்வியிலும் விளையாட்டிலும் முன்னேற்றம் கண்டு வருகின்றது
-இதன் மூலம் இவ் பாடசாலை மாகாண தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலும் மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கி வருகின்றது.
இதன் ஒரு படி மேலாக இவ் பாடசாலையில் 13 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட குழு முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தில் ஒரு தமிழனாக வைத்திய அதிகாரியாக கடமையாற்றுபவரும் மன்னார் மாவட்டத்தில் உதைபந்தாட்டத்தை வளர்த்தெடுப்பதில் முக்கிய கவனம் செலுத்துபவருமான வைத்திய கலாநிதி எம்.மதுரநாயகம் அவர்கள் சுமார் ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான இவ் அணியினருக்கான உதைபந்தாட்ட காலணி மற்றும் குழுவுக்கான சீருடை இவ் பாடசாலையில் வெள்ளிக்கிழமை (21.10.2022) வழங்கி வைத்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)