
posted 2nd October 2022
எஸ் தில்லைநாதன்
உலக சுற்றுலா தினம்
யாழ். மாவட்ட தொல்லியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மத்திய கலாசார நிதியத்தின் அனுசரணையுடன் உலக சுற்றுலா தினம் இன்று ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது.
உலக சுற்றுலா தினத்தை முன்னெடுக்கும் முகமாக யாழ். பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக கல்லூரியின் சுற்றுலாத்துறை மாணவர்களுக்கு, சுற்றுலாத்துறையின் ஒரு பகுதியாகவும் அழிந்து செல்வதாகவும் காணப்பட கூடிய தொட்டுணர முடியாத மரபுரிமைகளை மையப்படுத்திய பயிற்சி பட்டறையும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை முன்னாள் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், பேராசிரியர் சிவலிங்கராஜா, யாழ். மாவட்ட தொல்லியல் திணைக்கள அதிகாரி பா.கபிலன், மத்திய கலாச்சார நிதியத்தின், யாழ். பல்கலைக்கழக கலாசார சுற்றுலாத்துறை மாணவர்கள், பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன்
வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட 23 வயது இளைஞர் கைது
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டு வந்த கும்பலின் முக்கியமான சந்தேக நபரொருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாவடியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். மானிப்பாயில் அண்மையில், இரு வேறு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்தியமை, கடந்த வருடம் அரியாலை மற்றும் பளையில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கியமை தொடர்பில் ஒருவரும், வன்முறையில் ஈடுபட்ட இருவரும் என மூவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபரிடமிருந்து 3 வாள்கள், மோட்டார் சைக்கிள் என்பன சான்று பொருள்களாக கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் ஐவர் தேடப்படுகின்றனர் என்றும் பொலிஸார் கூறினர்.
இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்
போதைப்பொருளுடன் பல்கலைகழக மாணவனும், வியாபாரியும் கைது
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் ஊவா பல்கலைகழக மாணவனையும், போதை வியாபாரி என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஊவா பல்கலைக்கழக மாணவனை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவனின் உடைமையில் இருந்து 750 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவராக பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்ட 52 வயதான நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY