பட்டிருப்புக் கல்வி வலயத்திற்கு முதலிடம்!

2022 ஆண்டிற்கான கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி கந்தளாய் லீலாரத்தின விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இப் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் 194 இடங்களைப் பெற்று முதலாம் நிலையினையும், கந்தளாய்க் கல்வி வலயம் 94 இடங்களைப் பெற்று இரண்டாம் நிலையினையும், கல்முனைக் கல்வி வலயம் 88 இடங்களைப் பெற்று மூன்றாம் நிலையினையும் பெற்றுக் கொண்டது.

பாடசாலை ரீதியாக மட்டக்களப்பு களுதாவளை மகா வித்தியாலயம் 123 இடங்களைப் பெற்று முதலாம் இடத்தினையும், கந்தளாய் அக்ரபோதி மகா வித்தியாலயம் 46 இடங்களைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், மட்டக்களப்பு செட்டிபாளையம் மகா வித்தியாலயம் 42 இடங்களையும் பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.

பட்டிருப்புக் கல்வி வலயத்திற்கு முதலிடம்!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)