
posted 16th October 2022
மன்னார் மாவட்டத்தில் இரு போகங்களில் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை அரசு தெரிவித்ததுக்கு அமைய நெல் சந்தைப்படுத்தும் சபையானது கொள்முதல் செய்யாமையால் மன்னார் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தங்கள் நெல்லை நெல் சந்சைப்படுத்தும் சபையானது குறிப்பிட்ட விலைக்கு கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் பிரதான குளமாகக் காணப்படும் கட்டுக்கரைக் குளத்தின் கீழ் நடப்பு வருடமாகிய 2022 - 2023 மேற்கொள்ளப்படும் காலபோக நெற் செய்கை தொடர்பான கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் உயிலங்குளத்தில் புதன்கிழமை (12.10.2022) இடம்பெற்றபோதே விவசாய அமைப்புகளால் இவ் கோரிக்கை விடப்பட்டது.
இது தொடர்பாக தெரிவிக்கையில்;
நெற் சந்தைப்படுத்தும் சபையினால் ஒரு கிலோ நெல்லை 130 ரூபாவுக்கு கொள்முதல் செய்யப்படும் என மன்னார் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்த பொழுதும் ஆனால் பணம் இல்லை என கைவிடப்பட்டிருந்தது.
இதனால் கடந்த காலபோகத்திலும் சிறுபோகத்திலும் மன்னார் மாவட்ட விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட நெல் விற்க முடியாத நிலையில் விவசாயிகளிடம் இருந்து வருகின்றது.
தனியார் ஒரு கிலோ நெல்லை 100 ரூபா தொடக்கம் 110 ரூபாவுக்கே கொள்முதல் செய்ய முனைகின்றனர். அத்துடன் நாளாந்தம் இதன் விலையையும் கொள்முதல் செய்வோர் குறைத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் காரணமாக விவசாயிகள் ஏற்கனவே நெற் செய்கையில் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் தங்களால் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஆகவே, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டமைக்கு அமைவாக நெற் சந்தைப்படுத்தும் சபையானது நெல்லை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக் கூட்டத்தில் விவசாயிகளினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் மூடைகளுக்கு மேல் குறிப்பிட்ட விலைக்கு விற்க முடியாத நிலையில் கையிருப்பில் இருப்பதாக விவசாயிகள் தெரிவிப்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY