
posted 22nd October 2022
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு, அம்பன் பகுதிகளில் மர முந்திரிகை செய்கையை மேம்படுத்தும் நோக்கில்
யாழ் மாவட்ட செயலகத்தின் சிறு தொழில் அபிவிருத்தி பிரிவினரின் ஏற்பாட்டில் மர முந்திரிகை கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் மர முந்திரிகை கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 2:30 மணியளவில் நாகர்கோவில் மேற்கு கிராம அலுவலகத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் நா. நாகேந்திரன் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் கருத்துரைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் க. பிரபாகரமூர்த்தி, வடபிராந்திய மர முந்திரிகை கூட்டுத்தாபன முகாமையாளர் சஞ்சீவன், யாழ் மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சிப்பிரிவு உதவி பணிப்பாளர் ரீ. தனஞ்சயன், சிறுதொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் வஜிதன், மற்றும் அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் 800 மர முந்திரிகை கன்றுகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)