
posted 23rd October 2022
மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் வான் ஒன்று தீயில் எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.
பயணித்துக் கொண்டிருந்த வான் திடீரென தீப்பற்றியது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக் கிழமை (21) 9 மணியளவில் சாரதி மட்டும் பயணித்த போது இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. மின் ஒழுக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்ற போதும் சரியான காரணம் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் கூறினர்.
சம்பவத்தையடுத்து காங்கேசன்துறை கடற்படை முகாமிலிருந்து தீயணைப்பு வாகனம் கொண்டு வரப்பட்டு தீயணைத்த போதும் வான் முற்றாகச் சேதமடைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)