திருத்தலங்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு சமயத் தலைவர்களின் தார்மீகப் பொறுப்பு

அண்மைக் காலமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் சமயத் திருத்தலங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்பு அடக்குமுறை என்பவற்றிலிருந்து திருத்தலங்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு சமயத் தலைவர்களின் தார்மீகப் பொறுப்பும், வரலாற்று கடமையாகவும் இருக்கின்றது எனவும்,

எனவே இவ்விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் திங்கள் கிழமை 17.10.2022 அன்று மாலை மட்டக்களப்பு ஆயர் இல்லத்தின் சாள்ஸ் மண்டபத்தில் ஆலோசனைக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

  • இவ்விடயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செய்தியாளர் சந்திப்பு;
  • மக்கள் கவன ஈர்புக்கான பல் சமய பிரார்த்தனை நிகழ்வு;
  • இவ்விடயத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திருமலை மற்றும் அம்பாறை மாவட்ட பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள் உடனான கலந்துரையாடல் வேண்டும் என தீர்மானிக்கப்பட்டன.

இவ் கலந்தாலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட சமய அமைப்புகளுடன் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை, கிழக்கு இந்து ஒன்றியம்,
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் மன்றம், சிறீ மகாமாரியம்மன் ஆலயம்,
சிறீ கிஷ்னன் ஆலயம் குருக்கள் மடம், சிறீ காயத்ரி கோவில் கல்லடி,
ஜமியத் உலமா சபை போன்ற பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

திருத்தலங்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு சமயத் தலைவர்களின் தார்மீகப் பொறுப்பு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY