
posted 1st October 2022
ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் பல இடங்களிலும் சிறுவர்- முதியோர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ் விழாவானது பேசாலையின் பகுதிகளிலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தினத்தை முன்னிட்டு மன்.பேசாலை சென் மேரிஸ் வித்தியாலயத்தின் எற்பாட்டில் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தில் அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் காலை கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன், ஆலயத்துக்குள் சிறுவர் முதியோரிடம் மலர் கொத்துக்கள் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்தியதுடன், அவர்களிடம் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சென் மேரிஸ் வித்தியாலய அதிபர் எஸ். இராஜேஸ்வரன் பச்சேக் (ராஜா மாஸ்ரர்) தலைமையில் மாணவர்கள் பேரணியாக பேசாலை பிராதான வீதியில் ஒன்றுகூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததுடன், அங்கு குழுமியிருந்த பெற்றோர் பெரியோர்களுக்கு தங்கள் எதிர்காலம் சிறக்க வேண்டிய கருத்துக்களையும் சிறுவர்கள் முன்வைத்து தங்கள் குரல் பதிவுகளையும் முன்வைத்தனர்.
அத்துடன் பாடசாலை அதிபர் ராஜா மாஸ்ரர், பங்கு தந்தை அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் மற்றும் மன்னார் சிறுவர் நன்னடத்தை அலுவலகர் ஜே. ஒஸ்மன் குலாஸ் ஆகியோரும் சிறுவர் தொடர்பான கருத்துக்களையும் முன்வைத்து உரையாற்றினர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY