
posted 24th October 2022


நிந்தவூரைச் சேர்ந்த பிரபல கவிஞரும், உசனார் சலீம் எனும் புனைப் பெயரில் எழுதிவருபவருமான எம்.ஐ.உசனார் சலீம் சிறந்த வானொலி நேயராகப் பாராட்டியும், விருது வழங்கியும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தென்றல் எப்.எம்.வானொலியே “சிறந்த தென்றல் நேயர்” என்ற பாராட்டையும், அதற்கான விருதையும் அவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தென்றல் எப்.எம்.வானொலி சார்பில் நடைபெறும் மதுர கீதம் நிகழ்வின் போது, கவிஞர் உசனார் சலீம் மேற்படி “சிறந்த தென்றல் நேயர்” பாராட்டையும், விருதையும் பெற்றுக்கொண்டார்.
மிக நீண்டகாலமாக வானொலி நேயராகவும், வானொலிக்கான படைப்பாளியாகவும் கவிஞர் உசனார் சலீம் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நேயர்களுக்கும் கௌரவளிக்கும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தென்றல் எப்.எம்.வானொலியைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)