சந்திப்பும், பங்கு பற்றுதலும்

இலங்கைக்கு வருகை தரும் முக்கிய வெளி நாட்டுப் பிரதி நிதிகள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுடனும் முக்கிய சந்திப்புக்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஓர் அங்கமாக ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருடனான சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

மேற்படி தூதுக்குழுவினர் தூதுவர் டெனீஸ் சைபீஸ் தலைமையில், தலைவர் ரவூப் ஹக்கீமை, கொழும்பு – 07, பௌத்த லோக மாவத்தை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

நாட்டில் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சமூக, பொருளாதார நெருக்கடி நிலமைகள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயரும், தலைவர் ஹக்கீமின் இணைப்பு செயலாளருமான ரஹ்மத் மன்சூரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்.

இதேவேளை துருக்கி குடியரசு பிரகடனத்தின் 99 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு கொழும்பு, கோல் பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற போது, தூதரக அழைப்பின் பேரில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சந்திப்பும், பங்கு பற்றுதலும்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)