சடலங்களாக மீட்கப்பட்ட கணவனும், மனைவியும் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை - நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை - நெடியகாடு, ஏ.ஜி.ஏ. ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது - 30), அவரது மனைவி கிருசாந்தினி (வயது - 26) என்ற இருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் தம்பதி உறங்கிய அறையில் தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலங்களாகக் காணப்பட்டனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேலும் கூறினர்.

சடலங்களாக மீட்கப்பட்ட கணவனும், மனைவியும் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional Ne

சடலங்களாக மீட்கப்பட்ட கணவனும், மனைவியும் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
சடலங்களாக மீட்கப்பட்ட கணவனும், மனைவியும் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
சடலங்களாக மீட்கப்பட்ட கணவனும், மனைவியும் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
சடலங்களாக மீட்கப்பட்ட கணவனும், மனைவியும் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More