
posted 10th October 2022
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரனையில் இன்று (10) உலக உள நல தினம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதற்குப் பொறுப்பான உள நல வைத்திய அதிகாரி வைத்தியர் பசில் ஜோகேஸ் லியோனின் பொறுப்பில் நடைபெற்ற இவ் விழாவில் வைத்தியர் ரி.வினோதன் (மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்) உட்பட பல பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ் விழாவில் இப்பிரிவில் கடமையாற்றும் பணியாளர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)