
posted 15th October 2022
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆரம்ப புலனாய்வு விசாரணைக் குழு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மூன்று ஊழியர்கள் மீது குற்றம் இனம்காணப்பட்டு அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவரினால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவல்களுக்கு அமைய குறித்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் கணக்காய்வு அறிக்கைகள் மற்றும் கணக்காளரின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆரம்ப புலன் விசாரணையை மேற்கொள்வதற்கு கிளிநொச்சி மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் வி. கலைச்செல்வனை தலைவராாவும், கிளிநொச்சி சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளர் த. ஆரணி மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் ச. பிரசாத் ஆகிய இருவரையும் உறுப்பினராகவும் கொண்ட மூவரடங்கிய விசாரணை குழு தமது விசாரணையை மேற்கொண்டு ஆரம்ப புலன்விசாரணை அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.
இந்த புலன் விசாரணை அறிக்கையின் பிரகாரம் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் முகாமைத்துவ சேவை அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இருவர் என ஐவர் மீதும் குற்றம் காணப்பட்டுள்ளது எனவும், அவர்களுக்காக மாதிரி குற்றப் பத்திரம் ஆரம்ப புலன்விசாரணை குழுவினரால் சமர்பிக்கப்பட்டுள்ளது எனவும், ஆகவே குற்றப் பத்திரமும், ஆரம்ப புலன்விசாரணை அறிக்கையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக உரிய தரப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, கிளிநொச்சி சுகாதாரப் பணிப்பாளர் மீதான குற்றப் பத்திரம் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளாருக்கும், கணக்காளர் மீதான குற்றப் பத்திரம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கும், முகாமைத்துவ அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீதான குற்றப்பத்திரம் வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளருக்கும் (நிர்வாகம்) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வழங்கியுள்ளது.
ஓகஸ்ட் 31ஆம் திகதி அன்று வடக்கு மாகாணத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனத்தின் பின்னர் செப்ரெம்பர் 9ஆம் திகதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY