
posted 4th October 2022
கிழக்கு மாகாணத்திலுள்ள கலை, இலக்கிய மன்றங்களை இயங்கும் நிலை மன்றங்களாக இயங்கச் செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரண்யா சுதர்ஸன் இதற்கான செயல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
இந்த கலை, இலக்கிய மன்றங்கள் உறங்கு நிலையிலில்லாது எதிர்காலத்தில் உயிரோட்டமுள்ள, செயற்திறன் மிக்க மன்றங்களாக இயங்குவதற்கான ஆக்க பூர்வ நடவடிக்கைகளைப் பணிப்பாளர் சரண்யா எடுத்து வருகின்றார்.
இதற்கான ஆரம்ப நடவடிக்கையாக கிழக்கில் இயங்கிவரும் கலை, இலக்கிய மன்றங்களை மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் ஏற்கனவே திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் மீளவும் பதிவை புதுப்பிப்பதற்கும், இதுவரை பதிவு செய்யப்படாத மன்றங்களை புதிதாக பதிவு செய்வதற்கும் பணிப்பாளரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கிழக்கிலுள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்கள கலாச்சார உத்தியோகத்தர்களின் அனுசரணையுடன் இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை கலை மற்றும் இலக்கிய மன்றங்களை புதுப்பித்தல் மற்றும் புதிதாக பதிவு செய்யும் போது ஆகக் குறைந்தது இருபது அங்கத்தவர்கள் மன்றத்தில் அங்கத்துவம் பெற்றிருக்க வேண்டுமென்றும்,
மன்ற நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் மற்றும் தொழில் விபரங்களை மன்ற அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டுமெனவும் மாகாணப் பணிப்பாளர் சரண்யா சுதரஸன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மன்றங்களினால் முன்னெடுப்புக்கள், நிகழ்ச்சிகள் மற்றும் மாதாந்த கூட்டங்கள் நடத்தப்படும் பொழுது உரிய பிரிவுகலாச்சார உத்தியோகத்தருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு கலாச்சார உத்தியோகத்தர்கள் கூட்டங்களில் கலந்து கொள்வதுடன்,
அழைப்புக்களின் பிரதியினை மாகாண பணிப்பாளருக்கு அனுப்பி வைத்தல்வேண்டும் எனவும் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இத்தகைய முறைப்படி செயற்படாத மன்றங்களின் பதிவுகள் உடனடியாக இரத்துச் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY