
posted 9th October 2022
கலைகளை நாம் வளர்க்கும் நோக்கம் ஒருபுறமிருக்க, கலைஞர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற எண்ணம் எமக்கு உருவாக வேண்டும். அத்துடன் தமிழர் பாராம்பரியத்தையும் இன்றைய சமூகத்துக்கு ஊட்ட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என முன்னாள் கணக்காய்வு அத்தியட்சகர் ஏ. லோகநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
புதன்கிழமை (05.10.2022) மன்னாரில் விஎம்சிரி கலை மன்றக் கட்டிடத்தை முன்னாள் கணக்காய்வு அத்தியட்சகரும் தற்பொழுது அவுஸ்ரேலியாவில் வசிப்பவருமான ஏ. லோகநாதன் பிரதம அதிதியாக கலந்த கொண்டு திறந்து வைத்தபோது மேலும் தெரிவிக்கையில்;
இந்த கலை மன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டிருப்பவர்கள் யாவரும் கலைஞர்களாகவே காணப்படுவது மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருக்கின்றது.
இங்கு இந்த நிகழ்வில் பல நிகழ்வுகள் இடம்பெற்றது. ஒவ்வொருவரும் தங்கள் வேறுபட்ட கலை நிகழ்வுகளை காட்டினர். உண்மையில் இதற்கான களம் அமைத்து கொடுத்த இந்த கலை மன்றத்துக்கு நன்றி கூற வேண்டும்.
இன்றைய சூழலில் சினிமா மற்றும் கையடக்க தொலைபேசியில் மூழ்கியுள்ள சமூகத்துக்கு ஒரு திருப்பு முனையாக இந்த கலை மன்றம் வழி சமைத்துள்ளது.
கலை ஒரு நுட்பமானது திறமைகளை உள்ளடக்கியது. இதன் மூலம் பண்பாடு, வரலாறு காட்சிப்படுத்தப்பட்டு உள வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கின்றது. அத்துடன் கற்பனை திறனையும் வளர்த்தெடுக்கின்றது.
முன்னோர் காலத்தில் தமிழர்கள் 64 கலைகளையும் கற்றிருந்தனர். கூடுவிட்டு கூடுபாய்வதும் ஒரு கலை. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் கால சுழற்சியினால் இக் கலையெல்லாம் கைநழுவி சென்ற பின் ஒன்பது கலைகளே தற்பொழது கையாளப்பட்டு வருகின்றது.
கட்டிட கலை, சிற்பம், ஓவியம், இசை, நாட்டுக்கூத்து, திரைப்பட கலை என இவ்வாறு ஒன்பது கலைகள் ஊடாகவே கலை நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.
கலைகளை நாம் வளர்க்கும் நோக்கம் ஒருபுறமிருக்க கலைஞர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற எண்ணம் எமக்கு உருவாக வேண்டும்.
தமிழ் நாட்டில் 91 ஆயிரம் பாடல்கள், ஏடுகள் ஆரியர் படையெடுத்த காலத்தில் அழிக்கப்பட்டது. அவ்வாறு இலங்கையில் யுத்தக் காலத்தில் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இவ்வாறு தமிழர் பாரம்பரிய ஏடுகள் யாவும் அழிக்கப்பட்டன.
ஆகவே, இந்த கலை மன்றம் கலையுடன் தமிழர் பாராம்பரியத்தையும் இன்றைய சமூகத்துக்கு ஊட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY